×

மறைந்த முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினார். 2016-ல் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக கு.க.செல்வம் தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக மீதான அதிருப்தி காரணமாக கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பின்னர், 2022ம் ஆண்டு மீண்டும் கு.க.செல்வம் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. உடல் நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமான திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு உடனிருந்தார்.

 

The post மறைந்த முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,MLA ,K.K.Selvam ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,DMK ,G.K.Selvam. ,Kodambakkam, Chennai ,Thousand Lamp Constituency.… ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...